animal husbandry
பறவை இனங்கள் :: வாத்து வளர்ப்பு :: வளரும் வாத்துகளின் பராமரிப்பு முதல் பக்கம்

வளரும் வாத்துகளின் பராமரிப்பு

வாத்துகள் 4 வார வயது வரை மித தீவிர வளர்ப்பு முறையில் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு ஹெக்டரில் 5000 வாத்துக்குஞ்சுகள் வரை வளர்க்க முடியும். சிறிய அளவிலும் 200 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.

தீவிர வளர்ப்பு முறையில், ஆழ் கூள முறை, அல்லது சட்டப் பலகை முறையில் வளர்க்கலாம். குடிதண்ணீர் தேவையான அளவு தாராளமாக வழங்கப்பட வேண்டும். நீர்த்தொட்டிகளின் ஆழம் வாத்துகள் அவற்றின் அலகை நனைக்க ஏற்றவாறு இருக்க வேண்டும். 13-15 செ.மீ ஆழம் இருத்தல் நலம்.

care of growing ducks
மித தீவிர வளர்ப்பு முறை

 

தீவிர வாத்து வளர்ப்பு முறையில் இட அளவு 4-5 ச.டி ஒரு வாத்திற்கு இருக்க வேண்டும். மித தீவிர வளர்ப்பு முறையில் 3 ச.அடி இரவிலும் பகலில் மேயவிடுவதற்கு 10-15 ச.அடி அளவும் போதுமானது. ஈரப்பதமுள்ள தீவனங்களை ‘V’ வடிவமான தீவனத்தட்டுகளில், 10-12.5 செ.மீ இடைவெளிவிட்டு வைக்கலாம். உலர் தீவன வகைகளில் அல்லது குச்சித்தீவனமாக இருப்பின் வாத்துகள் உண்ணக்கூடிய அளவு தீவனத்தை 5-7.5 செ.மீ இடைவெளியில் வைக்கலாம்.

duck pond
வளர்ப்பு முறை

நல்ல முட்டை உற்பத்தி அதிகமுள்ள வாத்து வகைகள் 16-18 வார வயதில் முட்டையிடத் துவங்கிவிடும். 95-98 சதவீத முட்டைகள் காலை 9 மணிக்குள் இடப்பட்டுவிடும். ஒவ்வொரு 3 வாத்துகளுக்கும் 80 x 30 x 45 செ.மீ (12 x12 x18”) அளவுள்ள முட்டைக் கூடு பெட்டிகள் வைக்கப்படவேண்டும். முட்டையிடும் வாத்துகளுக்கு ஆண், பெண் இனச்சேர்க்கை விகிதம் 1:6-7 என்று இருக்கலாம். நல்ல உற்பததிக்கு 14-16 மணி வரை சூரிய ஒளி அவசியம். திறந்தவெளி அமைப்பில் 1 ஏக்கரில் பரப்பில் இருக்கும் உணவைப்பொறுத்து  1000 வாத்துகள் வரை வளர்க்கலாம்.

(ஆதாரம்: www.vuatkerala.org)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15